shadow

’24’ படத்தின் பாடல்கள் ரிலீஸ். இன்று மாலை யூடியூபில் டிரைலர்.
24 audio
‘மனம்’ இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்த ’24’ படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏ.ஆர்.ரஹ்மானின் ’24’ பாடல்கள் இன்று முறைப்படி ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் இந்த படத்தின் டிரைலரும் இந்த விழாவில் வெளியிடப்பட்டது.

ஆனால்உம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு யூடியூப் இணையதளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று ஒரே நாளில் ’24’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளதால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன், க்ரிஷ்ஹ் கர்நாட், அஜய், சரண்யா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விக்ரம்குமார் இயக்கியுள்ள இந்த சயிண்டிஃபிக் த்ரில்லர் படம் வரும் மே மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *