வெள்ளத்தில் சிக்கிய 24 கல்லூரி மாணவர்களின் கதி என்ன? ஐதராபாத்தில் பதட்டம்

studentsஐதராபாத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் 24 பேர் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டதாக வந்த தகவலை அடுத்து ஐதராபாத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

ஐதராபாத்தில் உள்ள வி.என்.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வட இந்திய சுற்றுலாவிற்கு கடந்த 3ஆம் தேதி சென்றிருந்தனர். நேற்று அவர்கள் குலுமணாலியில் உள்ள பீஸ் நதிக்கரையில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்கள் சிக்கி, வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டனர்.

தங்களது கண்முன்னே தங்களது நண்பர்கள் வெள்ளநீரில் அடித்து செல்லப்படுவதை பார்த்த மாணவர்களும், மாணவிகளும் கதறி அழுதனர். உடனடியாக மீட்புப்படையினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த துயர சம்பவத்திற்கு  மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்தார். ஹிமாச்சல மாநில அரசின் கல்வித்துறை அமைச்சரை உடனடியாக தொடர்பு கொண்ட இரானி,  மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் வி.என்.ஆர். கல்லூரி முன் மாணவர்களின் பெற்றோர்கள் கண்ணீருடன் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன ஆனது என்பதை அறிய பதட்டமுடன் கூடியுள்ளனர்.

Leave a Reply