23க்கு 23 சரியாபோச்சு! சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக பதவியேற்கும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர். கட்சி எம்.எல்.ஏ.க்கள் 23 பேரை இழுத்துக்கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, இம்மாதம் 23ஆம் தேதி 23 எம்.எல்.ஏக்களை மட்டுமே கடவுள் வழங்கியுள்ளார். அவர் செய்த பாவம் மீண்டும் அவரையே தாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

குதிரை பேரம் மூலம், 23 எம்.எல்.ஏ.,க்களை, சந்திரபாபு நாயுடு, தம்மோடு இணைத்துக்கொண்டது குறித்து இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறியது கட்சியினரிடையே கலகலப்பை ஏற்படுத்தியது.

மேலும் தற்பொழுது வெற்றி பெற்றிருப்பது மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்றும், நல்ல முறையில் பணியாற்றி 2024 ஆண்டு தேர்தலிலும் இதேபோன்ற ஒருவெற்றியை மக்களிடம் பெற உழைக்க வேண்டும் என எம்.எல்.ஏக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply