சூர்யா, சமந்தா நடிக்கும் புதிய படம் அஞ்சான். இதில் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை சமீபத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது அஞ்சான்.
இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று ரிலீஸ் செய்ய இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி முடிவு செய்துள்ளார். அதனால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் முடிவடைந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக ரெட் டிராகன் என்ற நவீன வகை கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவிலேயே இந்த கேமரா எந்த படத்திலும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் நடனம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

Leave a Reply