இன்று நண்பகல் 12 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடந்தது. ஆளுனர் உரையுடன் கூட்டம் ஆரம்பித்தபோது திமுக எம்.எல்.ஏக்கள் மு.க. ஸ்டாலின் தலைமையில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர்.

ஸ்டாலினை தொடர்ந்து புதியதமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்களும் வெளியேறினர்.

சட்டசபை வெளிநடப்புக்கு பின்னர் பேட்டியளித்த ஸ்டாலின் தமிழகத்திற்கு பயன்படும் உருப்படியான திட்டங்கள் எதுவும் இதுவரை நிறைவேற்றவில்லை. மேலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு வருவதால் இந்த வெளிநடப்பை செய்கிறோம். வரும் சட்டசபை கூட்டத்தொடரில் மக்கள் பிரச்சனையை பற்றி பேசுவோம் என்று கூறினார்.

பின்னர் ஆளுநர் உரையுடன் சட்டசபை தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை தொடர்ந்து நடக்கும் என சபாநாயகர் தெரிவித்தார்.

Leave a Reply