இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு: அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 1 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் சற்றுமுன் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூறினார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்

மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை

கொரோனாவை சமாளிக்க சமூக விலகல் ஒன்றுதான் ஒரே தீர்வு என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளதால் கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்கக் கூடாது

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply