21 வயது சென்னை இளம்பெண் கொரோனாவால் மரணம்:

மருத்துவமனையில் சேர்ந்த ஒரே நாளில் நேர்ந்த சோகம்

கொரோனா தவிர வேறு எந்த நோயும் இல்லாத சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்த ஒரே நாளில் மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையை சேர்ந்த 21 வயது இளம்பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜூலை 6 ஆம் தேதி காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

ஆனால் அவர் சிகிச்சையின் பலனின்றி ஜூலை 7ஆம் தேதி காலை 7 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு கொரோனா அறிகுறி தவிர வேறு எந்த நோயும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சர்க்கரை நோய் உள்பட ஒருசில நோய் இருந்த நிலையில் தற்போது கொரோனாவால் மட்டுமே உயிரிழந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Leave a Reply