21 சட்டமன்ற தேர்தலில் போட்டியா? ரஜினிகாந்த் பதில்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே கூறிவிட்ட நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் 21 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்க உதவும் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறியது மாநில, மத்திய கட்சிகள் இரண்டையும் சேர்த்தே தான் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக பாராளுமன்ற தேர்தலுக்கு பின் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *