56 வயது நபரின் கிட்னியில் இருந்த 206 கற்கள்: டாக்டர்கள் அதிர்ச்சி

56 வயது நபரின் கிட்னியில் இருந்த 206 கற்கள்: டாக்டர்கள் அதிர்ச்சி

ஐம்பத்தி ஆறு வயது நபர் ஒருவரின் கிட்னியில் 206 கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ஐதராபாத்தை சேர்ந்த 56 வயது நபர் வயிற்று வலி என மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது அவரது கிட்னியில் கற்கள் இருந்தது தெரியவந்தது

இதனை அடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கற்களை வெளியே எடுத்தபோது மொத்தம் 206 கற்கள் இருந்தது தெரியவந்தது

தற்போது அந்த நபர் நலமாக இருப்பதாகவும் படிப்படியாக குணமாகி வருவதாகவும் கூறப்படுகிறது