அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கும் சென்னையில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023ஆகவும், சென்னையில் மொத்தம் 1458 பேர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 38 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் இதனையடுத்து மொத்தம் 1,379 பேர்கள் குணமாகியுள்ளனர்

சென்னையை அடுத்து கடலூரில் 9 பேர்களும், கள்ளக்குறிச்சியில் 6 பேர்களும் கோவையில் நால்வரும், அரியலூர், மதுரை, சிவகங்கை மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதியில் தலா இருவரும் செங்கல்பட்டு, கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலையில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இன்று பாதிப்பு அடைந்துள்ளனர்

Leave a Reply