2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிசீலனை

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இடம் பெற செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முயற்சித்து வருகிறது.

லாசானே, 34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதம் நடக்கிறது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இடம் பெற செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள், கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான திட்ட அறிக்கையை சமர்பிக்கும்படி ஐ.சி.சி.யை கேட்டுக் கொண்டுள்ளது.