2023 வரை டிரம்ப் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம்!

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஃபேஸ்புக் பக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது 2023ஆம் ஆண்டு வரை முடக்கப்பட்டுள்ளது. இதனை ஃபேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2023க்கு பின்னரும் பொதுமக்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தால் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே டிரம்ப் ஃபேஸ்புக் பக்கத்திற்கு அனுமதி

தன்னுடைய ஃபேஸ்புக் பக்கம் நீக்கம் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், ‘தனக்கு மட்டுமின்றி தனக்கு வாக்களித்த கோடிக்கணக்கான மக்களையும் அவமதிப்பது போல் உள்ளது என்று கூறியுள்ளார்.