2021 டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்: சர்ச்சை விளம்பரத்தால் பரபரப்பு

2021 ஆம் ஆண்டு டிகிரி முடித்தவர்களுக்கு வேலை இல்லை என்ற விளம்பரத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது

பிரபல தனியார் வங்கி ஒன்றில் தமிழ் நாளிதழ் ஒன்றில் கொடுத்த விளம்பரத்தில் 2021 ஆம் ஆண்டு டிகிரி முடித்தவர்கள் தவிர மற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விளம்பரம் தவறாக செய்யப்பட்டு விட்டதாகவும் 2021 ஆம் ஆண்டு டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பதற்கு பதிலாக விண்ணப்பிக்க கூடாது என்று தவறாக பிரிண்ட் செய்யப்பட்டு விட்டதாகவும் தவறுக்கு வருந்துவதாகவும் அந்த தனியார் வங்கி தெரிவித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது