2021ஆம் ஆண்டு அதிமுக, திமுக அல்லாத ஆட்சி அமையும்: தினகரன்

2021ஆம் ஆண்டு அதிமுக, திமுக அல்லாத ஆட்சி அமையும்: தினகரன்

அதிமுகவுக்கு சவாலாக இருக்கும் என கருதப்பட்ட டிடிவி தினகரனின் அமமுக கட்சி தற்போது கிட்டத்தட்ட கரைந்துவிட்ட நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சின்னம், இடைத்தேர்தலில் ஒரு சின்னம், உள்ளாட்சி தேர்தலில் ஒரு சின்னம் என குழப்பம் வேண்டாம் என்பதால் தான், இடைத்தேர்தலில் போட்டியிட வில்லை. பதிவு வேலை முடியும் வரை காத்திருந்தோம்

கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது ஒரு விபத்துதான். அவர்கள் எப்போதும் இரட்டை நிலைப்பாட்டோடு இருப்பதால்தான் 2013, 2016 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்தார்கள்.

ரஜினி கமலை போட்டியாகவோ, சவாலாகவோ கருதவில்லை, ஆனால் 2021-ல் அதிமுக, திமுக அல்லாத ஆட்சி அமையும் என்று தினகரன் கூறினார்

Leave a Reply