2019ல் டுவிட்டரில் டிரெண்ட் ஆன 4 வீரர்கள்: சச்சினுக்கு எத்தனையாவது இடம்?

2019ல் டுவிட்டரில் டிரெண்ட் ஆன 4 வீரர்கள்: சச்சினுக்கு எத்தனையாவது இடம்?

2019ஆம் ஆண்டு டுவிட்டரில் டிரெண்ட் ஆன அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது ட்விட்டர் வெளியிட்டு வருவது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது 2019 ஆம் ஆண்டில் டிரெண்டான நான்கு கிரிக்கெட் வீரர்கள் குறித்த தகவல்களையும் டுவிட்டர் இணையதளம் தெரிவித்துள்ளது
அதன்படி கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் டுவிட்டரில் டிரெண்ட் ஆனவர்களில் முதலிடத்தில் விராத் கோலி இடம்பிடித்துள்ளார். அவரை அடுத்து தோனி, ரோகித் சர்மா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

முதல் நான்கு இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன் ரிட்டையர் ஆன சச்சின் இடம்பெற்று இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் இந்த ஆண்டு அதிகம் சதங்களையும் ரன்களையும் அடித்த ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பதும், விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் தல தோனி இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.