2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தமிழக அரசு

2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தமிழக அரசு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபர் 18ஆம் தேதிக்குள் வெளிவர வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை குறித்த காலத்திற்குள் வெளியிடாததால் திமுக இதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜாரானார். தமிழகத்தில் கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடந்து வரும் தொகுதி வரையறை பணி 2018 பிப்ரவரி மாதம் வரை நடைபெறும் என்பதால் அதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் விளக்கமளித்தபோது, ‘2018 பிப்ரவரி மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.