shadow

2017-2018ஆம் ஆண்டின் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று மக்களவையில் 2017-2018ஆம் ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நான்காவது முறையாக அருண்ஜெட்லி தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்

இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையுள்ள வருமானத்திற்கான வரி மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.

* ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கு மேல் இருந்தால் 15 சதவீதம் வரி விதிக்கப்படும்.

* 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதாக வரி குறைப்பால் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்க வரி வராது.

* கட்சிகள் இதுவரையில் ஒருவரிடம் இருந்து ரூ.20,000 வரை ரொக்கமாக நிதி பெற அனுமதி இருந்தது.

* கட்சிகளுக்கு காசோலை, மின்னணு முறை மூலம் மட்டுமே நன்கொடை தர வேண்டும்.

* அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை வெளிப்படையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசியல் கட்சிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

100 நாள் வேலை திட்டம் கண்காணிப்பு

* 100 நாள் வேலை திட்டத்தை கண்காணிக்க விண்வெளி தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும்.

* 2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையுள்ள வருமானத்திற்கு 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.

* 10 சதவீதமாக வரி இருந்த நிலையில் 5 சதவீதமாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

* தனி நபர் வருமன வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கத்தில் இருக்கும்.

* 2ம் நிலை நகரங்களில் குறிப்பிட்ட விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும்.

* ஆண்டு வர்த்தகம் ரூ.50 கோடிக்கும் குறைவாக உள்ள நிறுவனங்களுக்கு வரி 25 சதவீதமாக குறைக்கப்படும்.

* 1.5 லட்சம் சுகாதார துணை மையங்கள் சுகாதார நல மையங்களாக மாற்றப்படும்.

* கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்க ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* ரூ.50 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறு நிறுவனங்களுக்கு 5 சதவீதம் வரி குறைப்பு.

* இயற்கை எரிவாயு- இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்படும்.

ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பணப்பரிவர்த்தனைக்கு தடை

* ரூ.3 லட்சத்துக்கும் மேல் உள்ள ரொக்க பணப்பரிவர்த்தனைக்கு தடை விதிக்க முடிவு

* அரசியல் கட்சிகள் நிதிபெறுவதி்ல் வெளிப்படைத் தன்மை தேவை.

* அரசியல் கட்சிகள் ஒருவரிடம் இருந்து இனி ரூ.2000 மட்டும ரொக்கமாக பெற முடியும்.

* ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் காட்டும் 76 லட்சம் பேரில் 56 லட்சம் பேர் மாத ஊதியம் பெறுவோர்.

* பணப்புழக்கம் அதிகம் இருப்பதாலேயே எளிதாக வரி ஏய்ப்பு செய்ய முடிகிறது.

* கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்க கூடுதலாக ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* 2016 நவம்பர் 8 முதல் டிசம்பர் 30 வரை 1.09 கோடி கணக்குகளில் ரூ.2 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை டெபாசிட்.

* வெளிப்படையான வங்கி டெபாசிட் விவரங்கள் எதிர்காலத்தில் வரிவசூல் அதிகரிக்க உதவும்.

* ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வோருக்கு மட்டுமே தனி சிறப்பு ரயில் அறிமுகம் செய்யப்படும்.

* 1.72 லட்சம் பேர் மட்டுமே ஆண்டு வருமானம் ரூ.50 லட்சமாக உள்ளதாக காட்டியுள்ளனர்.

* 24 லட்சம் பேர் மட்டுமே ஆண்டு வருமானம் ரூ.10 லட்சமாக உள்ளதாக காட்டியுள்ளனர்.

* பணப்புழக்கம் அதிகமாக இருப்பதனாலேயே வரிஏய்ப்பு அதிகம் நடக்கிறது.

* மலிவு விலை வீடு கட்டும் திட்டத்துக்கு கட்டமைப்பு அந்தஸ்து அளிக்கப்படும்.

* மலிவு விலை வீடுகளுக்கான சலுகைகள் பெறுவதில் உள்ள நிபந்தனைகள் தளர்க்கப்படும்.

* 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு இலக்கு.

* சிட்பண்ட் மோசடிகளை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும்.

* வறட்சியை சமாளிக்க நாடு முழுவதும் ஐந்து லட்சம் குளங்கள் ஏற்படுத்தப்படும்.

* 1.50 லட்சம் கிராமங்களில் இணையதள சேவை

* 2019க்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ- டாய்லெட் வசதி ஏற்படுத்தப்படும்.

* தலைமை தபால் அலுவலகத்தி்ல் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சிறுதொழில் கடன் வழங்க ரூ.2.44 லட்சம் கோடி ஒதுக்கப்படும்

* ராணுவத்திற்கான நிதி ரூ.2,74,11 கோடி ஒதுக்கீடு

* நாடு முழுவதும் ஒரு கோடி குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* 50 ஆயிரம் கிராம ஊராட்சிகள் வறுமை இல்லாதவையாக மேம்படுத்தப்படும்.

* வங்கிக்கடன் திருப்பித் தராதவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய சட்டம் கொண்டு வரப்படும்.

* இளைஞர்கள் அறிவியலில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* நிதி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பினாலும் சொத்து பறிமுதல் செய்யப்படும்.

* நிதிப்பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தியில் 3.2 சதவீதமாக இருக்கும்.

* புதிதாக இரண்டு கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

* தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்

* ரயில் பாதுகாப்புக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய மெட்ரோ ரயில் கொள்கை உருவாக்கப்படும்.

* போக்குவரத்து துறைக்கு ரூ.2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

* அந்திய முதலீட்டு அனுமதி வாரியம் கலைக்கப்படும்

* ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் எண்ணிக்கை 200லிருந்து 500 ஆக அதிகரிக்கப்படும்

* வங்கிகளில் சட்டவிரோத டெபாசிட்டுகளை தடுத்திடும் வகையில் சட்டம் இயற்றப்படும்.

* ஆதார் அடிப்படையிலான பணப் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்படும்.

* ரயில் பயணிகளின் பாதுகாப்பு, தூய்மைக்கு முக்கியத்தும் தரப்படும்.

* 3,500 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.

* அகல ரயில் பாதை தடத்தில் 2020க்குள் ஆளில்லா ரயில்வே கேட் இல்லாத நிலை எட்டப்படும்.

* மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதம் உறுதியான வருவாயுடன் எல்ஐசியில் திட்டம்.

* 7000 ரயில்களில் சூரிய ஒளி மின்திட்டம் செயல்படுத்தப்படும்.

* உயிர்காக்கும் மருந்துகள், கருவிகளுக்கான விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நுண் சொட்டு நீர் பாசனத்துக்கு தொடக்க மூலதனம் ரூ.5,000 கோடி நிதி.

* அனைத்து உயர்கல்வி தேர்வுகளையும் சிபிஎஸ்இ உள்ளிட்ட அமைப்புகள் நடத்தாது.

* உயர்கல்வி தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை ஏற்படுத்தப்படும்.

* உயர்கல்வித்துறையின் பல்கலைக்கழக மானிய குழுவில் சீர்திருத்தம் செய்யப்படும்.

* கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

* பயணிகளுக்கு உதவ ரயில் பெட்டிகளில் உதவியாளர்கள் நியமிக்கப்படுவர்.

* நகர்புற வளர்ச்சியில் மெட்ரோ ரயில் கட்டமைப்பின் பங்கு இன்றியமையாததாகிறது.

* கட்டமைப்பு துறைக்கு ரூ.3.96 லட்சம் கோடி ஒதுக்கீடு

* 2019க்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பசுமை கழிப்பறைகள் அமைக்கப்படும்.

* ஐஆர்சிடிசி தளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை வரி கிடையாது.

* குஜராத், ஜார்க்கண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை

* வெளிநாட்டு மொழிக்கல்வி கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

* மூன்று கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

* பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு ரூ.1,84,000 கோடி ஒதுக்கீடு (கடந்த ஆண்டு ரூ.1,56,000 கோடி)

* மருத்துவ சாதனங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* குஜராத், ஜார்க்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள் அமைக்கப்படும்.

* கிராமப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கடன் வட்டி குறைக்கப்படும்.

* எஸ்.சி பிரிவு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.52,393 கோடி ஒதுக்கீடு (கடந்த அண்டு ரூ.38,833 கோடி)

* இளைஞர்களின் வருடாந்திர கற்றலை அளவிட புதிய முறை உருவாக்கப்படும்.

* நாட்டில் 2019-ம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்.

* 2017-18 நிதியாண்டில் விவசாய வளர்ச்சி 4.1 சதவீதமாக இருக்கும்.

* கச்சா எண்ணெய் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவது சவாலாக உள்ளது.

* கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,17,000 கோடி (கடந்த ஆண்டு ரூ.87,765 கோடி)

* பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மாணவர்கள் புதுமை படைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் மகளிர் பங்களிப்பு 55 சதவீதம் உயர்வு.

* அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 2019ம் ஆண்டிற்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.

* பெணிகளின் வளர்ச்சிக்காக கிராமங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* 100 நாள் வேலை திட்டத்துக்காக முன்பை விட அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஊரக, வேளாண் சார்ந்த துறைகளுக்கு 2017-18ல் ரூ.1,87,223 கோடி ஒதுக்கீடு

* வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.

* இந்தியாவை தொழில்நுட்ப பலமிக்க நாடாக மாற்றுவதே அரசின் இலக்கு.

* விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டில் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்காக நபார்டு மூலம் ரூ.8000 கோடி வழங்கப்படும்.

* கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்படும்.

* சிறுகுறு விவசாயிகள் தடையின்றி எளிதாக கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* 2018, மே ஒன்றாம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தப்படும்.

* நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 361 பில்லியன் டாலராக உள்ளது.

* ரயில்வேத்துறை சுதந்திரமாக இயங்கும்

* வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க வழி ஏற்படும்.

* விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்கு இலக்கு (கடந்த ஆண்டு சுமார் 9 லட்சம் கோடி)

* உலக பொருளாதார வளர்ச்சி 2017ல் 3.4 ஆக இருக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது.

* உலக பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும் இந்திய பொருளாதாரம் நிலையாக உள்ளது.

* பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13,000 கோடி இலக்கு.(கடந்த ஆண்டு ரூ.5,500 கோடி)

* கச்சா எண்ணெய் விலையில் நிச்சயமற்ற நிலை நிலவுவது சவாலாக உள்ளது.

* பல்லாண்டு வரி ஏய்ப்பை தடுக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கை உதவியுள்ளது.

* பணமதிப்பு நீக்க பாதிப்பை நீக்க புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம் அதிகரிக்கும்.

* அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

* இரண்டரை ஆண்டுகளில் பாஜக அரசு நிர்வாக சீர்திருத்தங்களை எடுத்துள்ளது.

* நாட்டின் முக்கியமான பொருளாதார காரணிகள் திருப்திகரமான உள்ளன.

* பணமதிப்பு நீக்கத்தின் விளைவு அடுத்த ஆண்டு தெரியவரும்.

* ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்தது.

* கறுப்புப் பணத்திற்கு எதிரான பணமதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது.

* வேலைவாய்ப்பை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம்.

* பணமதிப்பு நீக்கம் என்ற முக்கியமான முடிவை அரசு செயல்படுத்தியுள்ளது.

* ஜிஎஸ்டியில் ஒருமித்த கருத்தை எட்ட உதவிய அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி.

* பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டிற்கு நீண்ட கால பலனளிக்கும்.

* கடந்த ஓராண்டில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

* அரசின் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

* வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் 2016ல் 36 சதவீதம் உயர்ந்துள்ளது.

* இளைஞர் நலன், வேலைவாய்ப்புக்கு அரசு முக்கியவத்தும் கொடுத்து வருகிறது.

* மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.

* உலகப் பொருளாதாரம் நிலையாக இல்லாத நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

* நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

Leave a Reply