2014ல் இது பெரியார் மண் இல்லையா? கி.வீரமணியிடம் நெட்டிசன்கள் கேள்வி!

2014ல் இது பெரியார் மண் இல்லையா? கி.வீரமணியிடம் நெட்டிசன்கள் கேள்வி!

பெரியார் மண்ணான திராவிட பூமியில் எந்த கட்சியை விதைத்தாலும் மலராது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும் பெரியாரும், அண்ணாவும் வாழ்வதன் அடையாளமே 38 தொகுதிகளில் திமுக பெற்ற வெற்றி என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறித்து செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது கி.வீரமணி மேலே குறிப்பிட்டதை தெரிவித்தார்.

இதே பெரியார் மண்ணில்தால் திமுக கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றும் அப்போது இது பெரியார் மண் இல்லையா? என்றும் கி.வீரமணியிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply