200 யூனிட் வரை மின் கட்டணம் இல்லை: முதல்வர் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் ஏற்கனவே 100 யூனிட் வரை மின் கட்டணம் இல்லை என்ற நிலை இருந்து வரும் நிலையில் டெல்லியில் 200 யூனிட் வரை மின் பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதனால் குறைந்த அளவு மின் பயன்பாட்டாளர்கள் அதிக பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது

டெல்லியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து அம்மாநில முதல்வர் சலுகைகளை வாரி வழங்கி வருகிறார். சமீபத்தில் பெண்களுக்கு மெட்ரோ ரயிலில் கட்டணம் இல்லை என்ற உத்தரவை பிறப்பித்த முதல்வர் தற்போது மின் கட்டணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply