காதலன் வீட்டுக்கு வந்த காதலி: மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய குடும்பத்தினர்

காதலன் வீட்டுக்கு வந்த காதலி: மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய குடும்பத்தினர்

காதலன் வீட்டுக்கு வந்த காதலி ஒருவரை காதலனின் குடும்பத்தினர் மண்ணெண்ணையை ஊற்றிக் உயிரோடு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் என்ற பகுதியில் 20 வயது பெண் ஒருவரும் 25 வாலிபர் ஒருவர் காதலித்தனர் இந்த நிலையில் ஒரு சில முக்கிய விஷயங்கள் பேச வேண்டும், எனவே என்னுடைய வீட்டிற்கு வா என காதலன் அழைத்துள்ளார். இதனை நம்பி காதலி அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்

ஆனால் அப்போது காதலன் வீட்டில் இல்லை என தெரிகிறது. காதலனின் பெற்றோர் மற்றும் காதலனின் சகோதரர் மனைவி ஆகியோர் சேர்ந்து அந்தப் பெண்ணை சரமாரியாக திட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகமாகி காதலியை உயிரோடு கொளுத்த மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்துள்ளனர்

தீக்காயங்களால் துடித்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அந்த பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காதலனின் பெற்றோர் மற்றும் சகோதரர் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காதலன் வீட்டிலேயே காதலி உயிரோடு தீ வைத்து கொளுத்தப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply