20 பேர்களை பிணைக்கைதிகளாக்கி கொலையாளி மிரட்டல்: உபியில் பெரும் பரபரப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுவர் சிறுமிகள் மற்றும் பெண்கள் என 20 பேர்களை பிணைக் கைதியாக வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடும் தீவிரவாதிக்கும் போலீசாருக்கும் நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் ஜாமினில் வெளிவந்த கொலையாளி ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டம் என கூறி தனது வீட்டுக்கு குழந்தைகள் மற்றும் பெண்களை அழைத்து வந்து அவர்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்ட போது வீட்டிலிருந்து கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிரடியாக அந்த வீட்டினுள் நுழைந்தால் உள்ளே இருக்கும் பிணைக்கைதிகளாக இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் போலீசார் நிதானமாக செயல்பட்டு வருகிறார்கள்

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தீவிரவாத எதிர்ப்புப் படையை அரசு அனுப்பி வைத்துள்ளதாகவும் அடுத்தகட்ட நடவடிக்கையாக காவல் துறை அதிரடியாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

பிணைக் கைதிகளாக இருக்கும் சிறுவர் சிறுமியர் மற்றும் பெண்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உபி அரசு தெரிவித்துள்ளது

Leave a Reply