20 தொகுதிகளில் வெற்றி பெற குறுக்கு வழியில் செல்லும் எதிர்க்கட்சிகள்: அமைச்சர் ஜெயகுமார்

20 தொகுதிகளில் வெற்றி பெற குறுக்கு வழியில் செல்லும் எதிர்க்கட்சிகள்: அமைச்சர் ஜெயகுமார்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ், திருவாரூர் எம்.எல்.ஏ கருணாநிதி ஆகியோர்களின் மறைவு ஆகியவைகளால் காலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் 20 தொகுதிகளில் வெற்றி பெற குறுக்கு வழியை முயற்சிப்பதாகவும், எந்த குறுக்கு வழியை மேற்கொண்டாலும், 20 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் 2021 பொதுத்தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும் காவிரி உள்ளிட்ட பிரச்சனையில் திமுக முழுமையான அளவிற்கு தமிழக நலனை காக்கவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.

ஜெயகுமார், 20 தொகுதிகள், இடைத்தேர்தல், குறுக்கு வழி

Leave a Reply