ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் இருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குஜராத்தூர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் மேலும் பல தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply