shadow

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்த மெடிக்கல் காலேஜ் மாணவிகளுக்கு சிறைதண்டனை
isis
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மெடிக்கல் காலேஜ்  மாணவிகள் இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷிய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக கடந்த 2014ஆம் ஆண்டு இரண்டு பெண்களை ரஷ்ய போலீசார் கைது செய்தனர்.

எலேனா அர்ஷக்கானோவா மற்றும் சைடா கலிகோவா ஆகிய அந்த இரு இளம்பெண்களும் மெடிக்கல் காலேஜில் படித்து வந்தனர். வீட்டில் தயாரிக்கப்பட்ட சோப் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை உள்நாட்டில் விற்பனை செய்துவந்த அவர்கள் இருவரும் அதன்மூலம் கிடைத்த லாபத்தை வங்கியின் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைத்தது உளவுத்துறையினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவர் மீதும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கடந்த திங்கட்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி, எலேனா அர்ஷக்கானோவாக்கு ஐந்தாண்டு மூன்று மாதங்கள் மற்றும் சைடா கலிகோவாவுக்கு ஐந்தாண்டு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

Chennai Today News: 2 Russian Women Jailed For Aiding ISIS Group

Leave a Reply