அமெரிக்காவில் அதிர்ச்சித் தகவல்

உலகம் முழுவதும் அனைத்து கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் மனிதர்களை மிக வேகமாக தாக்கி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த கொரோனா வைரஸ் விலங்குகளை தாக்காமல் இருப்பதே ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது

மனிதர்களையே கட்டுப்படுத்த முடியாத போது விலங்குகளுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்றினால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. இருப்பினும் அமெரிக்காவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் ஒருசில சிங்கங்களுக்கு புலிகளுக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நியூயார்க்கில் இரண்டு பூனைகளுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை அந்த இரண்டு பூனைகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றினால் உலகமே பெரும் பிரச்சனையை சந்திக்கும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்

Leave a Reply