லேப்டாப்பில் 182 செக்ஸ் வீடியோஸ்: பெண்களை மிரட்டி பணம் பறித்த தொழிலதிபர்கள் கைது!

கொல்கத்தாவை சேர்ந்த தொழில் அதிபர்கள் இருவர் மறைவான இடங்களில் கேமராக்களை வைத்து பெண்களின் அந்தரங்க வீடியோகலை பதிவு செய்து அதன் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக தெரிகிறது. இதனையடுத்து இந்த 2 தொழிலதிபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்
கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்த தொழில் அதிபர்கள் பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு அந்த புகைப்படங்கள் வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக தெரிகிறது

இந்த நிலையில் கொல்கத்தா போலீசாரிடம் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிரடியாக இரண்டு தொழிலதிபர் கைது செய்யப்பட்டனர். ஆதித்யா அகர்வால் மற்றும் அனிஷ் ஆகிய இந்த இரண்டு தொழிலதிபர்களின் வீடுகளில் சோதனை செய்தபோது லேப்டாப் மற்றும் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன

அதில் 182 பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதனை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட தொழிலதிபர்களில் ஒருவருக்கு சொந்தமாக ஜவுளி நிறுவனம் மற்றும் ஓட்டல்கள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது

Leave a Reply