shadow

ஐ.நாவின் இளந்தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்ற 3 இந்திய இளைஞர்கள்

1நீடித்த வளர்ச்சி இலக்கில் அவர்களின் தலைமைப் பண்பு, ஏழ்மை ஒழிப்பில் பங்களிப்பு, சமத்துவம், சமநீதிக்கான போராட்டம், வரும் 2030-ம் ஆண்டுக்குள் பருவநிலை மாறுபாட்டை எதிர் கொள்ளும் திட்டம் ஆகியவை சார்ந்த 17 இளம் தலைவர்களை ஐ.நா தேர்வு செய்துள்ளது. இந்த 17 பேர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் மற்றும் இன்னொருவர் அமெரிக்க வாழ் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் முதலாவதாக இடம் பெற்ற இந்தியர் த்ரிஷா ரெட்டி. 25 வயதான இவர் மகளிர் கல்வி, மறுவாழ்வு, பாலின அத்துமீறல்களுக்கு எதி ரான நடவடிக்கைக்காக ஷீசேய்ஸ் என்ற அமைப்பை நிறுவி சேவை செய்து வருகிறார்.

அடுத்ததாக இந்த பட்டியலில் இடம்பெற்ற 24 வயது அங்கித் கவார்ட்டா. இவர் திருமணம், திருவிழாக்கள், கொண்டாட்டங்களில் உணவுகள் வீணடிக்கப்படுவதைத் தடுத்து, அவற்றைத் தேவைப்படுவோர்க்கு கொண்டு சேர்ப்பதற்காக ஃபீடிங் இந்தியா அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.

மூன்றாவதாக இந்த பட்டியலில் இடம் பிடித்தவர் அமெரிக்க வாழ் இந்தியர் கரண் ஜெராத். கடலுக்கடியில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எண்ணெய் எடுக்கும்போது, எண்ணெய் சிந்தாமல் இருப்பதற்கான மூடி அமைப்பைக் கண்டறிந்ததற்காக இவர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply