2 ஆண்டுகள் நிறைவடைந்தது: கருணாநிதி நினைவிடத்தி நன்றி கூறிய உதயநிதி ஸ்டாலின்!

திமுக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து உதயநிதி ஸ்டாலின் முன்னாள் முதல்வரும் தனது தாத்தாவுமான கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது

தி.மு.கழகத்தின் இளைஞரணி செயலாளராக கடமையாற்றும் வாய்ப்பை கழக தலைவர் அவர்கள் தந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் இன்று மரியாதை செய்தேன். கலைஞர் வழியில், தலைவர் வழிகாட்டலில் அயராது உழைப்போம். நன்றி.