2வது திருமணத்திற்கு மகன்கள் சம்மதிக்காததால் மின்கம்பத்தில் ஏறி போராடிய 60 வயது முதியவர்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற 60 வயது முதியவர் ஒருவர் தனது மகன்கள் சம்மதிக்காததால் மின்கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தோல்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவரின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்

இதனை அடுத்து அவர் தன்னால் தனியாக இருக்க முடியவில்லை என்று கூறி இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால் அவருடைய மகன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திடீரென மின்கம்பத்தில் ஏறி போராட்டம் செய்தார்

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அவரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply