2வது ஒருநாள் போட்டி: தீபக் சஹார் அதிரடியால் இந்தியா வெற்றி!

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

276 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அதிரடியாக விளையாடிய தீபக் சஹார், போட்டியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியில் 69 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியை தீபக் சஹார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

நேற்றைய போட்டியின் ஸ்கோர் விவரம்:

இலங்கை: 275/9 50 ஓவர்கள்

சாரித் அஸ்லாங்கா: 65
அவிஷ்கா பெர்னாண்டோ: 50
சாமிகா கருனரத்னா: 44

இந்தியா: 277/7 49.1 ஓவர்கள்

தீபக் சஹார்: 69
சூர்யகுமார் யாதவ்: 53
க்ருணால் பாண்ட்யா: 35

அடுத்த போட்டி: ஜூலை 23