அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சம் புதிய வாக்காளர்கள்: அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அந்நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சம் புதிய வாக்காளர்கள் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

யூடியூப் பிரபலமான டேவிட் என்பவர் தனது யூட்யூபில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேருபவர்களில் ஐந்து பேரை தேர்வு செய்து விலையுயர்ந்த கார் பரிசளிப்பதாக அவர் அறிவித்துள்ளார்

இதனை அவர் ஒரு தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து இந்த கார்களை பரிசு அளிக்க உள்ளதாக கூறினார் காரை பரிசாக பெற வேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published.