shadow

ஜார்ஜ், செந்தாமரை கண்ணன் உள்பட 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக அரசு அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வரும் நிலையில் நேற்றிரவு திடீரென 19 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. இவர்களில் முன்னாள் சென்னை கமிஷனர் ஜார்ஜ் அவர்களும் அடங்குவார். உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ள உத்தரவின் படி இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் குறித்து தற்போது பார்ப்போம்

1. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், தீயணைப்புத் துறை டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. தீயணைப்புத் துறை ஏ.டி.ஜி.பியாக இருந்த குடவ்லா, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக டி.ஜி.பியாக இருந்த கே.பி.மகேந்திரன், மின்வாரிய விஜிலென்ஸ் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. காத்திருப்பு பட்டியலில் இருந்த ஐ.ஜி சாரங்கன் அமலாக்கப்பிரிவு ஐ.ஜி,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. செந்தாமரைக் கண்ணன் தொழில்நுட்பப் பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. சென்னை மாநகர உளவுப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த தாமரைக்கண்ணன், சி.பி.சி.ஐ.டி ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. பிரேம் ஆனந்த் சின்ஹா சென்னை பெருநகர வடக்கு போக்குவரத்து இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. ஜெயக்குமார் விழுப்புரம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. செல்வகுமார் பூக்கடை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10.ஜோஷி நிர்மல்குமார் உளவுத்துறை சி.ஐ.டி-யின் டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. விக்ரம் க்யூ பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
12. அருண் சக்திகுமார் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
13. சிபிசக்கரவர்த்தி திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
14. அருளரசு நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15. ஓம் பிரகாஷ் மீனா ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்”
16. நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்”
17. அருண்பாலகோபாலன், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பிரிவு உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்”
18. சென்னை சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி. திருநாவுக்கரசு, சென்னை நுண்ணரிவுப்பிரிவு -1 துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்”
19.போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி சென்னை போலீஸ் நிர்வாக உதவி ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்”

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply