shadow

19 வயது கல்லூரி மாணவிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

அமெரிக்காவில் உள்ள நியூஹாம்ப்ஸ்பையர் என்ற பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் 19 வயது அனோக் யாய் என்ற இளம்பெண். கருப்பு நிறத்தில் வித்தியாசமான சிகை அலங்காரம் கொண்ட இந்த பெண்ணை பல்கலையில் உள்ள பலர் விநோதமாக பார்ப்பதுண்டு

இந்த நிலையில் இவர் பல்கலை வளாகத்தில் நடந்து செல்லும்போது இவரை கவனித்த ஒரு பத்திரிகையாளர் உடனே புகைப்படம் எடுத்து அதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்

இந்த புகைப்படம் ஒருசில மணி நேரத்தில் வைரலாகியது. பலர் இவர் மாடலிங் செய்ய போகலாமே என்று கருத்து தெரிவித்தனர். பல்கலையில் தனது நிறத்தால் பலர் ஒதுக்கிய நிலையில் இவருக்கு மூன்று முன்னணி நிறுவனங்கள் மாடலிங் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சி அடநித அனோக்யாய் தற்போது உற்சாகத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *