19 மணி நேரம் இடைவிடாத விமானம் பயணம்: புதிய சாதனை

அமெரிக்காவின் நியூயார்க் நகர் முதல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் வரை ஒரு விமானம் 19 மணி நேரம் இடையில் எங்குமே நிற்காமல் பறந்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

4 பைலட்கள் இணைந்து இயக்கிய அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 49 பேர் பயணம் செய்தனர். இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக முடிந்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என குவென்டாஸ் விமான நிறுவன சிஇஓ ஆலன் ஜாய்ஸ் கூறி உள்ளார்.

இந்த இடைவிடாத விமான பயணம் வெற்றிகரமாக இயக்கப்பட்டதை தொடர்ந்து விரைவில் பயணிகளுடன் ரெகுலர் இடைவிடாத பயணம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply