18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் சமீபத்தில் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு விசாரணைகளும் முடிந்துவிட்ட நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இருப்பினும் இந்த வழக்கின் தீர்ப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பை பொருத்தே தனிக்கட்சி தொடங்குவதா? அல்லது அதிமுகவை கைப்பற்றுவதா? என்பது குறித்த முடிவை டிடிவி தினகரன் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply