அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வெளிமாநிலத்தில் வேலைக்கு சென்றவர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் சிக்கலில் உள்ளனர்

இருப்பினும் தற்போது தான் வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் வீட்டிற்கு செல்வதற்காக சிறப்பு ரயில் விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கட்டுமான தொழில்கள் நாளை முதல் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து ஒரு கான்கிரீட் கலவை லாரி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தது

அந்த லாரியை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த லாரியை சோதனை செய்தபோது கான்கிரீட் கலவை வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் மனிதர்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

பின்னர் ஒவ்வொருவராக அவர்களை வெளியே வரச் சொன்னபோது அதில் 18 பேர்கள் இருந்தது தெரியவந்தது இவர்கள் அனைவரும் மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் செல்லும் தொழிலாளர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது

இதனையடுத்து கான்கிரீட் லாரி டிரைவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் கான்கிரீட் கலவையில் கலவை செய்யும் பகுதியில் 18 பேர் ஒளிந்திருந்து சொந்த மாநிலம் செல்ல முயற்சிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply