18 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்கிறார் ஆசிஷ் நெஹ்ரா

18 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்கிறார் ஆசிஷ் நெஹ்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக கடந்த 18 வருடங்களாக விளளயாடிய ஆசிஷ் நெஹ்ரா தனது ஓய்வை அறிவித்துள்ளார். வரும் நவம்பர் 1 முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

1990ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் 38 வயதான ஆசிஷ் நெஹ்ரா கடந்த 1999 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இவர் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டி 2004ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டி ஆகும்

ஆசிஷ் நெஹ்ரா இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளிலும், 120 ஒருநாள் போட்டிகளிலும் 26 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்டுகக்ளும், ஒருநாள் போட்டியில் 157 விக்கெட்டுக்களும், டி.-20 போட்டிகளில் 34 விக்கெட்டுக்களும் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் நாளை நடைபெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நெஹ்ரா விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply