18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்

18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18 அன்று நடைபெறும் என்று, எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில், தேர்தல் குறித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த 3 தொகுதிகளுக்கும் இப்போது தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று தேர்தல்
ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் மீண்டும் தமிழகத்தில் 3 தொகுதிகள் காலியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த மூன்று தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் வரும் என்பதே இந்த தொகுதி மக்களின் ஏக்கமாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published.