18 ஆயிரம் வாக்குகள் கதிர் ஆனந்த் வித்தியாசத்தில் முன்னிலை

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர்.

இதனையடுத்து சற்றுமுன் வெளியான தகவலின்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,89,575 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 3,71,026 வாக்குகளும் பெற்றனர். இதனையடுத்து கதிர் ஆனந்த், ஏசி சண்முகத்தை விட 18,549 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply