18 ஆண்டுகளாக குழந்தை குற்றவாளிகளுக்காக ஹாஸ்டல் நடத்து ம்பெண்

18 ஆண்டுகளாக குழந்தை குற்றவாளிகளுக்காக ஹாஸ்டல் நடத்தும் பெண் ஒருவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் கடந்த 2003ஆம் ஆண்டு குழந்தை குற்றவாளிகளுக்கான ஹாஸ்டல் ஒன்றை தொடங்கினார்

புவனேஸ்வர் நகரில் தொடங்கப்பட்ட இந்த ஹாஸ்டலில் ஜெயில் அதிகாரிகளின் அனுமதி பெற்று குழந்தை குற்றவாளிகள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு தேவையான படிப்பு உடல் நலம் மற்றும் சமூக அக்கறை குறித்த தகவல்கள் பயிற்றுவிக்கப்பட்டது

ஒவ்வொரு குழந்தைகளும் வளரும்போது குற்றவாளியாக மாறக் கூடாது என்றும் பொறுப்புள்ள குடிமகனாக வைக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்பதற்காக இந்த ஹாஸ்டலை தான் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்

18 ஆண்டுகளாக நடத்தி வரும் இந்த ஹாஸ்டலில் இருந்து விடுதலையாகி செல்லும் குழந்தைகள் பலர் நல்ல நிலைமையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply