548 வாக்கில் 175 வாக்குகள் மட்டுமே பதிவு! மறுவாக்குப்பதிவின் சோகம்

சென்னை வேளச்சேரி தொகுதியில் 92ஆம் எண் வாக்குச்சாவடியில் ஏப்ரல் 17ஆம் தேதி மறுவாக்குபதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது என்பது தெரிந்ததே

இன்று காலை 7 மணி முதல் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் சற்று முன் கிடைத்த தகவலின்படி 175 வாக்குகள் மட்டுமே 92ஆம் எண் வாக்குச்சாவடியில் இதுவரை பதிவாகி தெரிகிறது. இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 548 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வாக்குப்பதிவு செய்யும்போது அனைத்து வாக்காளர்களுக்கும் நடு விரலில் மை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.