17 வயது சிறுவனுக்கு 350 சிசி வண்டியா? அப்பாதான் முதல் குற்றவாளி: வைரலாகும் வீடியோ!

17 வயது சிறுவனுக்கு 350cc வண்டி வாங்கி கொடுத்த அப்பாதான் முதல் குற்றவாளி என சென்னை போலீஸ் அதிகாரி ஒருவர் பேசிய வீடியோ ஒன்று டுவிட்டரில் வைரலாகி வருகிறது
சென்னையில் நேற்று நடந்த விபத்து ஒன்றில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அந்த வண்டியில் பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞர் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த விபத்து குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர் 17 வயது நிரம்பிய, லைசென்ஸ் இல்லாத ஒரு சிறுவனுக்கு 350cc வண்டியை வாங்கிக் கொடுத்த அந்த சிறுவனின் அப்பா தான் முதல் குற்றவாளி என்றும், இதுபோன்று பொறுப்பில்லாத பெற்றோர்களால் தான் விபத்துக்கள் அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளார்

மேலும் ஹெல்மெட் போடுவதன் அவசியத்தையும் வண்டி ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் உட்கார்ந்து இருப்பவரும் ஹெல்மெட் போட வேண்டும் என்பது ஏன் என்பது குறித்தும் அவர் விளக்கமாக பொது மக்களிடம் கூறினார்

மேலும் தரமற்ற ஹெல்மெட் போடுவதால் எந்த பயனும் இல்லை என்றும் தலைக்கு தகுந்த தரமான ஐஎஸ்ஐ முத்திரை உள்ள ஹெல்மெட்டை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *