shadow

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த நிலையில் 167 என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடி வரும் நிலையில் முதல் ஓவரிலேயே நியூசிலாந்து அணி விக்கெட்டை இழந்துள்ளது.