shadow

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு காரணமாக மழை பெய்து வருகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் இன்று 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இன்று மழை பெறும் மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, காஞ்சிபுரம், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர்

நாளை மழை பெறும் மாவட்டங்கள் பின்வருமாறு: திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, கரூர், ஈரோடு