அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் இழப்பு; கமல்ஹாசன்

அரசியல் விளையாட்டுக்கு வந்ததால் எனக்கு 300 கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஆனால் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தற்போது கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அவர் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் அரசியல் விளையாட்டுக்கு வந்ததால் தனக்கு 300 கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கமல் தெரிவித்தார்.

மேலும் ஊழல் செய்தவர்கள் ஜெயிலுக்கு சென்றாலும் ஷாப்பிங் செல்ல வசதியாக உள்ளனர் என்றும் கமல் தெரிவித்துள்ளார் கமலஹாசனின் இந்த தேர்தல் பரப்புரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published.