இரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்: என்னென்ன தொகுதிகள்?

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் இருந்து போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் அவர் போட்டியிட வாய்ப்பு என தகவல்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற இந்த இரண்டு தொகுதிகளைக் கமல் தேர்ந்தெடுத்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி ஒரு லட்சத்திற்கும் அதிக வாக்குகளையும், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சுமார் 1. 45 லட்சம் வாக்குகளையும், பெற்றிருந்தது.

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியில் வரும் மார்ச் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply