பாஜகவில் குஷ்பு: உண்மையாகிறதா வதந்தி?

காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்பு, இன்று பாஜகவில் இணைகிறார் என்று வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் இன்று நடிகை குஷ்பு பாஜகவில் இணைகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைவதற்காக குஷ்பு, நேற்று டெல்லி புறப்பட்டதாகவும், இன்று காலை அவர் பாஜகவில் தன்னை இணைத்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக குஷ்பு பாஜகவில் இணையவுள்ளார் என்று வதந்திகள் கிளம்பிய நிலையில் அந்த வதந்தி உண்மையாகுமா? என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும்

Leave a Reply