shadow

பிலிப்பைன்ஸ் சிறையில் கலவரம். 153 கைதிகள் தப்பியோட்டம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் சிறையில் இரண்டு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலை பயன்படுத்தி அச்சிறையில் இருந்து 158 கைதிகள் தப்பி சென்றது அந்நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தெற்கே 950 கிமீ தூரத்தில் உள்ள கொடபேட்டோ என்ற பகுதியில் உள்ள கிடாபவன் நகரம் முஸ்லிம் பிரிவினைவாதிகள், கிரிமினல் குழுக்கள், கம்யூனிஸ்ட் ஊடுருவல்காரர்கள் ஆகியோர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இங்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு பகிரங்க ஆதரவு இருந்து வருகிறது.

இந்நகரின் ஒதுக்குப்புறமான, வனப்பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலையில் பல்வேறு அமைப்புகளின் முஸ்லிம் தலைவர்கள் உட்பட, 1,511 கைதிகள் அடைக் கப்பட்டிருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 1 மணியளவில் சிறைக்கைதிகளின் இரு குழுவினர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது.

இந்த கலவரத்தை பயன்படுத்தி சிறையின் கதவை உடைத்து 153 கைதிகள் தப்பிவிட்டனர். இந்த கலவரத்தில் சிறைக்காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.  

தப்பியோடிய கைதிகளையும், தாக்குதல் நடத்திய கும்பலையும் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply