சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காணும் பொங்கலை ஒட்டி லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இந்த கூட்டத்தில் நேற்று மட்டும் சுமார் 153 குழந்தைகள் காணாமல் போயினர். அவர்களை மீட்டு அனைத்து குழந்தைகளையும் அவரவர் பெற்றோர்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கல் திருநாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அதுபோல் நேற்றும் பெருவாரியான பொதுமக்கள் குவிந்தனர். இந்த கூட்டத்தில் 153 குழந்தைகள் காணாமல் போனதாக போலீஸாரிடம் புகார் வந்தது. அதே நேரத்தில் குழந்தைகள் தனியாக அழுது கொண்டிருந்ததாக அங்கு பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த போலீஸார் பல குழந்தைகளை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களை அவரவர்களின் பெற்றோர்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர். இருப்பினும் திருவொற்றியூரை சேர்ந்த விஜயலட்சுமி என்ற சிறுமி மட்டும் இன்னும் கிடைக்கவில்லை என அறியப்பட்டது. அந்த சிறுமியை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்று சென்னை மெரினாவில் கூடுதலாக 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு சுமார் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஐந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு அவ்வப்போது காணாமல் போனவர்கள் குறித்தும், காணாமல் போனவர்கள் கிடைத்தது குறித்தும் ஒலிபெருக்கியில் அறிவித்துக்கொண்டே இருந்தனர். காவல்துறையினரின் இந்த சிறப்பு ஏற்பாடுகளை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

Leave a Reply