இது எப்படி நடந்தது?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது

ஏற்கனவே பிரிட்டன் பிரதமர் உள்பட பல விவிஐபிக்களை இந்த வைரஸ் தாக்கி உள்ள நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி செய்தியாக சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த செய்தி சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஒரு நாட்டின் மன்னர் குடும்பத்தில் உள்ள 150 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரு வைரஸ் தொற்று பரவியிருப்பது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *